Simple Diary writing
Diary for all .// +TML : 07-02-2021
"Diary for all" - Translation of
அனைவருக்குமான என் நாட்குறிப்பு
On Sunday 07-02- 2021, I took face-to-face English class from 10.31 a.m. to 1.30 p.m. on my backyard.
ஞாயிற்றுக்கிழமை
07-02-2021
என் வீட்டின் கொல்லைப்புறத்தில் காலை 10.31 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஆங்கில வகுப்பு எடுத்தேன்.
Before the class, I ignited incense sticks and spread fragrance there.
அங்கு வகுப்பு துவங்குவதற்கு முன், ஊதுபத்திகளை நான் ஏற்றினேன். சற்று நேரத்தில் அங்கு வாசனை பரவியது.
In spite of the ringing bells of an ice-cream vendor and the mini grinder or mixie noise, we did some "AUDIO RECORDING".
பல சப்தங்கள் இருந்த போதிலும் நாங்கள் சில "ஆடியோ ரெக்கார்டிங்" (ஒலி பதிவுகள்) செய்தோம்.
ஒரு ஐஸ் கிரீம் விற்பனையாளர் மணி அடித்து கொண்டே ஐஸ் கிரீமை கூவிக் கூவி விற்பனை செய்தான். பக்கத்து வீட்டில் ஒரு மிக்சி "ஓய்ங்" என்று சப்தம் போட்டது.
After the English class I also shared certain points relating to "SOFT SkILLS".
ஆங்கில வகுப்பிற்குப் பிறகு நான் மென் திறன்களைப் பற்றிய சில விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.
After about 60 minutes class to
the "SONA COLLEGE" M.C.A. guy, another student, the lorry driver insisted to come and WATCH me take class to him.
சுமார் 60 நிமிடங்களுக்கு நான் "சோனா கல்லூரி" M.C.A. மாணவனுக்கு வகுப்பு எடுத்த பிறகு மற்றொரு மாணவர், லாரி டிரைவர், அம் மாணவனுக்கு நான் வகுப்பு எடுப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
I was a bit reluctant due to intelligence mismatch between them.
அவர்களுக்கு இடையே அறிவு நிலைகள் பொருத்தமற்று உள்ள காரணத்தால், எனக்கு அவரை அனுமதிக்க சற்று தயக்கமாக இருந்தது.
Anyway, I allowed him to come.
இருந்தாலும், நான் அவரை வர அனுமதித்தேன்.
Then I also made a joint AUDIO RECORDING with both their voice.
பிறகு நான் அவர்களின் இரு குரல்களையும் பயன்படுத்தி ஒரு ஆடியோ பதிவை செய்தேன்.
In that recording, one person read out a story and the other person explained it in Tamil. That is, my typical style.
அந்த பதிவில் ஒரு நபர் ஒரு கதையை ஆங்கிலத்தில் வாசிக்க, மற்றவர் தமிழில் அதை விளக்கினார். இது தான் என் வழக்கமான பாணி.
.
IT WAS A PLEASANT SURPRISE TO HEAR HIM SAY A FEW WORDS IN PRAISE OF MY EXTRAORDINARY TEACHING SkILLS TO THE SONA COLLEGE STUDENT.
லாரி டிரைவர் சோனா கல்லூரி மாணவரிடம் என் அசாதாரண கற்பித்தல் திறன்களை பாராட்டி ஒரு சில வார்த்தைகளை கூறியதை கேட்டு எனக்கு ஒரு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியாக இருந்தது.
After a long time, I was glad to have two of my ADULT LEARNERS mesmerized by my teaching.
நீண்ட காலத்திற்குப் பிறகு, வயது வந்த இருவர் மெய்மறந்த நிலையில் என்னிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
They attended my unique classes with rapt attention and were reluctant to go back home.
என் தனித்துவமான வகுப்பில் அவர்கள் மெய்மறந்த கவனத்துடன் கலந்து கொண்டனர். மேலும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல தயக்கம் காட்டினர்.
Ezhilarasan. Venkatachalam
Salem
Comments
Post a Comment