Movie review like comments for adutha jattai - Tamil movie
அடுத்த ஜாட்டை - (NEXT WHIP)
On 24.04.2020, Friday, I saw a Tamil movie titled "adutha jattai" in the cable TV. / 24.04.2020, வெள்ளிக்கிழமை, கேபிள் டீவியில் "அடுத்த சாட்டை" என்ற தமிழ் திரைப்படத்தை நான் பார்த்தேன்.
It was starred by Samuthira Kani and Thambi Ramaiyar. / இதில் சமுத்திர கனி மற்றும் தம்பி ராமையார் ஆகியோர் நடித்து இருந்தனர்.
Many people may not agree with the exaggerated theme. However, I liked the movie. / பலர் மிகைப்படுத்தப்பட்ட படத்தின் கருவிற்கு உடன்படாமல் போகலாம். எனினும், எனக்கு இந்த படம் பிடித்திருந்தது.
The story hovers around the college life. / கல்லூரி வாழ்க்கையைச் சுற்றி கதை இது.
But it was not the regular love story, wherein the hero keeps chasing the heroine and finally the heroine falls in love with him etc. / ஆனால் அது ஹீரோ கதாநாயகியை படம் பாதி வரை துரத்தி துரத்தி காதலிக்க கட்டாயப் படுத்துவது. இறுதியாக கதாநாயகி அவரை காதலிப்பது போன்ற--- வழக்கமான காதல் கதை அல்ல.
In this movie, many flaws in our education system are highlighted in a subtle way. They are as follows :
இந்த படத்தில், நமது கல்வி முறைகளில் பல குறைபாடுகளை நுட்பமான வழியில் எடுத்து காட்டுகின்றன. அவை பின்வருமாறு:
1) the caste based management system, the unfriendly attitude of teachers. /சாதி அடிப்படையிலான நிர்வாக அமைப்பு, ஆசிரியர்களின் அன்பற்ற அணுகுமுறை.
2) teachers targeting and harassing those students who ask questions about insufficient basic needs. /அடிப்படை வசதிகள் பற்றி கேள்வி கேட்கும் மாணவர்களை குறி வைத்து தொந்தரவு செய்யும் ஆசிரியர்கள்.
3) poorly qualified teachers etc. /மோசமாக தகுதியற்ற ஆசிரியர்கள் முதலியன
Throughout the movie Thambi Ramaiya, the Principal of the college, acts like a dictator or tyrant. / தம்பி ராமையா, கல்லூரியின் முதல்வர் ஒரு சர்வாதிகாரி அல்லது கொடுங்கோலன் போல செயல்படுகிறார்.
He is harassing Samuthira Kani, a Tamil teacher, in as many ways as possible. /அவர் பல வழிகளில் ஒரு தமிழ் ஆசிரியரான சமுத்திர கனியை தொந்தரவு செய்கிறார்.
However, by his positive attitude, Samuthira Kani wins most of the time. / எனினும், அவரது நேர்மறையான அணுகுமுறை மூலம், சமுத்திர கனி பெரும்பாலான நேரம் வெற்றி பெறுகிறார்.
Once he was cornered by the jealous Principal and is suspended for taking the students out of campus activity, without the permission of the management.
அவர் பொறாமை பிடித்த முதல்வரால் மடக்கப்படுகிறார். நிர்வாகத்தின் அனுமதியின்றி, மாணவர்களை வளாகத்திற்கு வெளியே கூட்டிச் சென்றதால் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
But the students go for a sit-in strike. And following this, Samuthira Kani is absorbed again into the college.
ஆனால் மாணவர்கள் உள்ளிருப்பு போராடாடம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து, சமுத்திர கனி கல்லூரியில் மீண்டும் சேர்க்கப்படுகிறார்.
Samuthira Kani is a positive thinker.
சமுத்திர கனி ஒரு நேர்மறையான சிந்தனையாளர்.
His approach towards the students is to give wholistic education and he decries cramming the lessons.
மாணவர்களுக்கு
முழுமையான கல்வி கொடுக்க வேண்டும் என்பது தான் அவரது அணுகுமுறை. மனப்பாடம் செய்யும் புத்தக புழு கல்வி முறையை அவர் வெறுக்கிறார்.
He wants students to face real life situations and difficulties and then overcome it themselves.
மாணவர்கள் உண்மையான வாழ்க்கை சூழ்நிலைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பின்னர் அவர்களே சுயமாக அதை கடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
During his classes he is very flexible with students. He motivates students to ask questions repeatedly.
அவரது வகுப்புகள் போது அவர் மாணவர்களிடம் மிகவும் நெகிழ்வாக பழகுவார். மாணவர்களை மீண்டும் மீண்டும் கேள்விகளைக் கேட்கும்படி அவர் ஊக்குவிக்கிறார்.
His is very compassionate and understands the background and family situation of each and every students.
அவரது அன்புடன் ஒவ்வொரு மாணவரின் பின்னணி மற்றும் குடும்ப நிலைமையை புரிந்துகொண்டு செயல்படுகிறார்.
He goes out of the way to help them in all crisis period.
அவர் தன் மாணவர்களுக்கு அனைத்து நெருக்கடியிலும் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்.
The students attitudes change and they get a very good result in exams.
மாணவர்கள் மனப்பான்மையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஆகையால் அவர்கள் பரீட்சைகளில் நல்ல மதிப்பெண் பெறுகின்றனர்.
Suddenly the college students get selected in campus interviews. Soon many outsiders call the college staff members and congratulate them.
திடீரென்று கல்லூரி மாணவர்கள் வளாகத்தில் நேர்காணல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிறகு பல வெளி கல்லூரயில் உள்ளவர்கள் இவர்களை அழைத்து வாழ்த்துகின்றனர்.
Hence, many novel methods introduced by Samuthira Kani on a trial basis, gets approved by the management.
எனவே, ஒரு சோதனை அடிப்படையில் சமுத்திர கனியால் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதிய வழிமுறைகள் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன.
There were of course lot of violence in this movie.
இந்த படத்தில் நிறைய வன்முறை இருந்தது.
Samuthira Kani thrashes a caste based team who wanted to blackmail the college management following the death of a student.
ஒரு மாணவரின் மரணத்தைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை அச்சுறுத்த விரும்பும் ஒரு சாதி அடிப்படையிலான குழுவை சமுத்திர கனி அடித்து வீழ்த்துகிறார்.
Those parents who want to change the present education system may like this movie.
தற்போதைய கல்வி முறையில் மாற்ற விரும்பும் பெற்றோர்கள் இந்த படத்தை விரும்பலாம்.
ஆங்கிலத்தில் எழுதி பின் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர்
எழிலரசன் வெங்கடாசலம் சேலம்
written in English and translated into Tamil
by
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil based English Trainer
[THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES]
Comments
Post a Comment