Judging Others // மற்றவர்களை எடை போடுவது
A young couple moved into a new house.
ஒரு இளம் ஜோடி ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தது.
.
The next morning the young woman saw her neighbour hanging the washed cloths outside.
மறுநாள் காலை அந்த இளம் பெண் தன் பக்கத்து வீட்டுக்கார பெண் துவைத்த துணிகளை வெளியில் தொங்கவிட்டதைப் பார்த்தாள்.
"That laundry is not very clean; she doesn’t know how to wash correctly. Perhaps she needs better soap powder”.
"அந்த துணிகள் சுத்தமாக இல்லை; அவளுக்கு சரியாக துணி துவக்க தெரியாது போல தெரிகின்றது. ஒருவேளை அவளுக்கு நல்ல சோப்புத் தூள் தேவைப்படலாம்." என்று தன் கணவனிடம் கூறினாள்.
Her husband looked on, remaining silent.
அவள் கணவன் அமைதியாக அவளைப் பார்த்தான்.
Every time her neighbour hung her washing out to dry, the young woman made the same comments.
ஒவ்வொரு முறையும் அவளுடைய பக்கத்து வீட்டுக்காரி துணிகளை வெளியே தொங்கவிடும் போது எல்லாம், அந்த இளம் பெண் அதே கருத்துக்களைத் தெரிவித்தார்.
A month later, the woman was surprised to see a nice clean wash on the line ...
ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பெண்மணி வெள்ளையாக துணிகளை துவைத்து காய போட்டு இருப்பைக் கண்டு ஆச்சரியமடைந்தாள்.
... and said to her husband, “Look, she’s finally learnt how to wash correctly.
தன் கணவரிடம், “கடைசியாக பக்கத்து வீட்டுக்காரரி எப்படி சரியாகக் துணி துவக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டாள்.
... I wonder who taught her this?"
... இதை அவளுக்குக் கற்றுக் கொடுத்தது யார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?" என்றாள்.
The husband replied, "I got up early this morning and cleaned our windows."
கணவர் இதற்கு, "நான் இன்று அதிகாலையில் எழுந்து நம் வீட்டு ஜன்னல்களை சுத்தம் செய்தேன்." என்று பதிலளித்தார்.
And so it is with life.
வாழ்க்கையிலும் அப்படித்தான்...
What we see when watching others depends on the clarity of the window through which we look.
மற்றவர்களைப் பார்க்கும்போது நாம் பார்ப்பது நாம் பார்க்கும் ஜன்னல் கண்ணாடியின் தெளிவைப் பொறுத்தது.
So don't be too quick to judge others, ...
எனவே மற்றவர்களை மதிப்பிடுவதற்கு அவசரப்பட வேண்டாம்.
... especially if your perspective of life is clouded by anger, jealousy, negativity or unfulfilled desires.
குறிப்பாக உங்கள் வாழ்க்கையின் கோபம், பொறாமை, எதிர்மறை அல்லது நிறைவேறாத ஆசைகளால் மேகமூட்டமாக அதிகமாக உங்களை சூழ்ந்து இருந்தால்.
"Judging a person does not define who they are. It defines who you are.”
"ஒரு நபரை நீங்கள் உங்கள் மனதில் எடை போட்டு பார்ப்பது அவர்கள் யார் என்பதை வரையறுக்காது. நீங்கள் யார் என்பதை தான் இது வரையறுக்கிறது."
Thanks to
Christopher HCMS78
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம் எச் சி எம் எஸ்
Comments
Post a Comment