translation -Today I happened to view a video of the stand-up comedian, Alexander Babu.
இன்று நான் ஸ்டேண்டுஅப்
நகைச்சுவை நடிகர் அலெக்சாண்டர் பாபுவின் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது.
I was astonished to see his multi-faceted talents.
அவருடைய பன்முகத் திறமைகளைக் கண்டு வியப்பு அடைந்தேன்.
He looks like R J Balaji to me. I checked a few of his videos. Amazing amalgamation of talents.
பார்ப்பதற்கு அவர் எனக்கு ஆர்.ஜே. பாலாஜி போல் இருக்கிறார். அவருடைய சில வீடியோக்களை நான் பார்த்தேன். அவர் பல திறமைகளின் அற்புதமான கலவையாக உள்ளார்.
Generally I used to take an interesting Tamil video and add subtitles in English.
பொதுவாக நான் ஒரு சுவாரசியமான தமிழ் வீடியோவை எடுத்து அதில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் சேர்ப்பேன்.
But in the videos of Alexander Babu, he is talking in fluent English and subtitles are in TAMIL.
அலெக்சாண்டர் பாபு வீடியோக்களில் சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார். தமிழில் வசன வரிகள் சப் டைட்டில்ஸ் வருகிறது.
It seems that he had been famous in the digital world for many years. However, I watched his videos only today!
அவர் பல ஆண்டுகளாக டிஜிட்டல் உலகில் பிரபலமாக இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இன்றுதான் அவருடைய காணொளிகளை நான் பார்த்தேன்!
On checking in Wikipedia, I came to know that he is a well-qualified person.
விக்கிபீடியாவைப் பார்த்ததில், அவர் நன்கு படித்தவர் என்று தெரிந்துகொண்டேன்.
And that he resigned a well-paid software job in Amazon and is now a full-time entertainer.
மேலும் அமேசானில் நல்ல சம்பளம் தந்த சாப்ட்வேர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இப்போது முழு நேர பொழுதுபோக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்.
My best wishes for him to reap more and more awards and entertain millions more!
அவர் மேலும் மேலும் பல விருதுகளைப் பெற்று பல கோடிக்கணக்கான மக்களை மகிழ்விக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
[29 May 2022]
compiler
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
Comments
Post a Comment