Nayanthara's success story
ஒளிரும் நட்சத்திரம்: நயன்தாராவின் வெற்றிக் கொடி!
Nayanthara hoists her flag!
.
நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் பரவலான விமர்சனப் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
Nayanthara's movie, "THE THIRD EYE" [netrikkan] had received wide appreciation in the O T T platform.
.
.
பெருவாரியான ரசிகர்களையும் திருப்திபடுத்தி உள்ளது.
Majority of her fans are satisfied with the movie.
படத்தில் குறைகண்டவர்கள் கூட நயன்தாராவின் நடிப்பைக் கொண்டாடுகிறார்கள்.
Even the critics who found fault in the movie, are celebrating Nayanthara's performance in it.
இந்தப் படத்தில் பார்வையிழந்த முன்னாள் சிபிஐ அதிகாரி துர்காவாக மையக் கதாபாத்திரத்தில்
நயன்தாரா நடித்திருக்கிறார்.
In this movie, Nayanthara has acted in the central character of a former CBI Official, Durga.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-
மறுவருகையில் முதலிடம்.
Topped in the re-entry.
நடிகைகள் மிகச் சில ஆண்டுகளே நாயகிகளாக நடிக்க முடியும் என்கிற தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியை மாற்றியதில் நயன்தாராவுக்கு முதன்மைப் பங்கு உண்டு.
Nayanthara has the primary role in the transformation of the Tamil cinema rule that an actresses can act as a heroine only for a few years.
நயன்தாரா அறிமுகமாகி 18 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.
Nayantara is going to complete 18 years in the industry.
இடையில் தனிப்பட்ட காரணங்களால் சில ஆண்டு இடைவெளி எடுத்துக் கொண்டார்.
However, she took a few years break in between, due to personal reasons.
முதல் கட்டத்தில் முன்னணி நடிகையரில் ஒருவராக இருந்தார் நயன்தாரா.
Nayanthara was one of the leading actress at the first stage.
மறுவருகையில் இன்னும் பல படி முன்னேறி இன்று சந்தேகத்துக்கு இடமின்றி உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
In the re-entry, she progressed a few steps and today she in undoubtedly a number one star.
அவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன.
Her movies continue to succeed.
‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ போன்ற தோல்வி திரைப் படங்களில் கூட அவருடைய பங்களிப்பு சோடைபோவது இல்லை.
Her contribution was great even in the failure movies like --- "IRA ', KOLAI UTHIR KALAM '.
அனைத்து வயதினரிலும் அவருக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
There are a large number of fans for her in all age groups.
தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.
Many actresses in the South Indian cinema have been successful before.
ஆனாலும் "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கப்பட்ட முதல் பெண் நயன்தாரா தான்.
But the first woman to be called as a "Superstar" is Nayanthara.
திரைப்படங்களில் தன் பெயருக்கு முன்னொட்டாக போடப்படும் "லேடி சூப்பர் ஸ்டார்" என்னும் அடைமொழி உண்டு.
In movies, "Lady Superstar" is the prefix for her name.
அதற்கு தன்னை எல்லா வகையிலும் முழுமையான தகுதிபடைத்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
She had put in maximum efforts to get qualified for that PREFIX.
-=-=-=-=-=-=-=-=-=-
இன்னும் பல ஆண்டுகள் தொடரப்போகும் இந்தப் பயணத்தில் மேலும் பல பரிமாணங்கள் இணையும் என்று நம்பலாம்.
This trip is going to continue for many years and you can expect additions of many new dimensions to it.
நன்றி :
இந்து தமிழ் நாளிதழ்
இந்து டாக்கீஸ்
ச.கோபாலகிருஷ்ணன்
தேதி : 20 ஆகஸ்ட் 2021
Thanks to
Tamil The Hindu newspaper
dated : 20 Aug 2021
தொடர்புக்கு:
gopalakrishnan.sn@hindutamil.co.in
source :
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/706904-nayanthara.html
.
.
முழு கட்டுரையின் ஒன்றில் எட்டு பகுதியை மட்டும் மொழிபெயர்ப்பு செய்தவர்
..
.
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
.
[One-eighth of the article]
translated by
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
THIS IS ONLY FOR
EDUCATIONAL PURPOSES
இது கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே
Comments
Post a Comment